மேலும் செய்திகள்
ஆபத்தான நிலையில் நகராட்சி வணிக வளாகம்
06-Sep-2025
சென்னை : அண்ணாசாலையில் உள்ள பிரபல வணிக வளாக தியேட்டரின் பராமரிப்பு லிப்டில் சிக்கி, இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பூர், மங்களாபுரம் குளக்கரை சாலையைச் சேர்ந்தவர் ராஜேஷ், 39. இவர், ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான இ.ஏ., எனும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பி.வி.ஆர்., தியேட்டரில் இன்ஜினியராக பணிபுரிந்தார். நேற்று அதிகாலை, தியேட்டரின் 4வது ஸ்கிரீனில் உள்ள புரொஜக்டரை சுத்தம் செய்யும் பணியில் ராஜேஷ் மற்றும் மூத்த இன்ஜினியர் தனசேகர், தொழில்நுட்ப ஊழியர்கள் முருகன், டேவிட் உள்ளிட்டோர், பணியில் ஈடுபட்டிருந்தனர். ராஜேஷ் பராமரிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் 'ஹைட்ராலிக் லிப்ட்'டில் 25 மீட்டர் உயரத்தில் நின்று கொண்டு, புரொஜக்டரை கழற்றி லிப்டில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, லிப்ட் திடீரென தானாக மேல்நோக்கி இயங்கி, தியேட்டரின் சீலிங்கில் மோதியது. இதில் சிக்கிய ராஜேஷ், தலையில் பலத்த காயமடைந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் ராஜேஷ் இறந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து அண்ணாசாலை போலீசார், வழக்கு பதிந்து நான்கு பேரிடம் விசாரிக்கின்றனர்.
06-Sep-2025