உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு

சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு

அமோனியா வாயு கசிவு காரணமாக, எண்ணுாரில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அச்சத்தின் காரணமாகவே மக்கள் போராடி வருகின்றனர்.இனி வரும் காலங்களில், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடாது என, பாதிக்கப்பட்ட மக்கள் அச்சம் தெரிவிப்பது நியாயம் தான். அவர்களின் அச்சத்தை போக்க வேண்டியது ஆலை நிர்வாகம் மற்றும் அரசின் கடமை.பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்கப்பட வேண்டும். ஏழை மக்கள் பாதிக்கப்படும்போது நாடுவது, அரசு மருத்துவமனையை தான். தனியார் மருத்துவமனையை அல்ல.எனவே, உடனடியாக பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலத்தை பேணும் வகையில், இங்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும்.- ஜி.கே.வாசன்,த.மா.கா., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ