உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செயற்பொறியாளர், உதவி கமிஷனர் காலி பணியிடம் நிரப்ப எதிர்பார்ப்பு

செயற்பொறியாளர், உதவி கமிஷனர் காலி பணியிடம் நிரப்ப எதிர்பார்ப்பு

சென்னை:சென்னை உள்ளிட்ட இதர மாவட்டங்களில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில், செயற்பொறியாளர்கள் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. சென்னை மாநகராட்சியில், 50க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பல மண்டலங்களில் உதவி கமிஷனர்கள் நிரப்பப்படவில்லை. செயற்பொறியாளர்கள் பதவி உயர்வு பெற்றால், உதவி கமிஷனர் மற்றும் மேற்பார்வை பொறியாளர் பணியிடம் நிரப்பப்படும்.இந்நிலையில், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் பணிபுரியும் 291 உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற தேர்வு செய்து, பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.இதில், சென்னை மாநகராட்சியில், 145 பேர் பணி உயர்வு பெற உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளதாகவும், இதனால், சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள செயற்பொறியாளர், உதவி கமிஷனர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை