உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக., முதல் வாரம் வரை நீட்டிப்பு

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக., முதல் வாரம் வரை நீட்டிப்பு

அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆகஸ்ட் முதல் வாரம் வரை மாணவர் சேர்க்கையை தொடர, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.அரசு பள்ளிகளில் மாணவ - மாணவியர் பயில வசதியாக, மார்ச் 1 முதல் சேர்க்கை துவங்கியது. தற்போதும் சேர்க்கைக்காக சில பள்ளிகளுக்கு பெற்றோர் வருகின்றனர். மாணவர்கள் ஒரு பள்ளியை விட்டு மற்றொரு பள்ளிக்கு மாறுவதும் தொடர்கிறது. சமீபத்தில் வடமாநில குழந்தைகள், பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ - மாணவியரை பள்ளியில் சேர்க்கும் பணியை வேகப்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டது.இந்நிலையில், ஆகஸ்ட் முதல் வாரம் வரை மாணவர் சேர்க்கை பணிகளை தொடர, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஜூலை மூன்றாவது வாரத்தில் முதல் இடைப்பருவத் தேர்வு துவங்கினாலும், செப்., மாதம் தான் காலாண்டுத் தேர்வு என்பதால், ஆகஸ்ட் முதல் வாரம் வரை மாணவர் சேர்க்கை நடைமுறைகளை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'இடங்கள் பூர்த்தியான பள்ளிகளை தவிர, பிற அரசு பள்ளிகளில் தொடர்ந்து இப்பணி நடைபெறும்' என்றனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி