போலி செக் மோசடி நபர் கைது
பெரம்பூர்: ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் அகமது, 48. பெரம்பூர், பல்லர்டு தெருவில் உள்ள இவருக்கு சொந்தமான கட்டடத்தின் முதல் தளத்தை, திருநெல்வேலி மாவட்டம், ராமநாதபுரம் தாலுகாவை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன், 45, என்பவருக்கு, கடந்த 2022ல், 46.76 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.அதில், 31 லட்சம் ரூபாயை காசோலையாக பெற்றுள்ளார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால், காசோலை திரும்பி வந்ததாகவும், அதற்குள், ஸ்ரீ கிருஷ்ணன் கிரைய பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து, 25 லட்சம் ரூபாய் கடனை பெற்றதும் தெரியவந்தது. இது குறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை, நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.