உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பகிங்ஹாம் கால்வாய் நீரோட்டத்திற்கு தடை; ஆகாயத்தாமரையை அகற்றாததால் அச்சம்

பகிங்ஹாம் கால்வாய் நீரோட்டத்திற்கு தடை; ஆகாயத்தாமரையை அகற்றாததால் அச்சம்

திருவான்மியூர்,:தென் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடியும் மழைநீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக, முட்டுக்காடு கடலில் சேர்கிறது. நீரோட்டம் சீராக இருக்க, பகிங்ஹாம் கால்வாயில் துார்வார வேண்டும்.அடையாறில் இருந்து திருவான்மியூர் பகுதி வரை உள்ள, பகிங்ஹாம் கால்வாயில் ஆகாயத்தாமரை, செடி, கொடிகள் வளர்ந்து கால்வாய் இருப்பது தெரியாமல் மறைந்துள்ளது. இந்த பகுதி, அகலம் குறைவாக உள்ளதால், நீரோட்டம் தடைபட வாய்ப்புள்ளது.சென்னையில் கோடை வெயில் தாக்கம் இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்கிறது. திடீரென கனமழை பெய்தால், வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பகிங்ஹாம் கால்வாயில் சேர்ந்துள்ள செடியை அகற்ற, நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை