உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரசாயத்தால் பழுக்க வைத்த மாம்பழ விற்பனை அதிகரிப்பு; ஆய்வு நடத்தாமல் உணவு பாதுகாப்பு துறையினர் மவுனம்

ரசாயத்தால் பழுக்க வைத்த மாம்பழ விற்பனை அதிகரிப்பு; ஆய்வு நடத்தாமல் உணவு பாதுகாப்பு துறையினர் மவுனம்

சென்னையில் சுவையில்லாத ரசாயன மாம்பழங்கள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அதை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தயங்குகின்றனர். தர்பூசணி பழங்கள் விவகாரம், கெட்டுப்போன உணவு தந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற உணவு பாதுகாப்பு துறை முன்னாள் அதிகாரி சதீஷ்குமார் மாற்றப்பட்டு, பணியிடம் ஒதுக்காமல் உள்ளதே அதிகாரிகள் தயக்கத்திற்கு காரணம். அதனால், ரசாயனம் பயன்படுத்த பழுக்க வைத்த மாம்பழங்கள், தரமற்ற குளிர்பானங்களை சாப்பிடுவோர், உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கோடை காலமான ஜூன், ஜூலை மாதங்களில், சென்னை கோயம்பேடுக்கு மாம்பழ வரத்து அதிகமாக இருக்கும். அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி, நீலம் உள்ளிட்ட மாம்பழங்கள், தற்போது விற்பனைக்கு வரத்துவங்கி உள்ளன.சில்லரை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் விற்பனைக்கு வரும் இவ்வகை மாம்பழங்களின் வெளிப்புற நிறம் மட்டுமே மஞ்சளாக உள்ளது.உள்ளே வெள்ளை சதை பற்றுடன் இனிப்பு சுவை மிகக் குறைவாக உள்ளது; விலையும் கூடுதலாக உள்ளது. கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.சமீப காலமாக எத்திபான், கால்சியம் கார்பைடு ஆகியவற்றை பயன்படுத்தி, சில வியாபாரிகள் காய்களை கனிய வைத்து விற்கின்றனர். இதுவே சுவை குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது.இதை தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், நரம்பு மண்டலம் பாதித்தல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.இதுபோன்ற நடக்காமல் இருக்க, கடைகளில் விற்பனை உள்ளவை இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களாக என்பதை கண்டறிவது அவசியம்.ஆனால், அப்பணியை மேற்கொள்ள வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஆய்வு நடத்தாமல் வாய்மூடி மவுனியாக இருக்கின்றனர்.அதற்கு காரணம், உணவு பாதுகாப்பு பணியில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்த, அத்துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் என, அத்துறையினர் கூறுகின்றனர்.கோடை காலம் துவங்கியப்போது, 'தர்பூசணியில் செயற்கை ரசாயனம் கலக்கப்படுவதால், உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, கலப்பிடமில்லாத தர்பூசணியை கண்டறிந்து வாங்கி சாப்பிட வேண்டும்' என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சதீஷ்குமார் வீடியோவை வெளியிட்டார்.இந்த வீடியோவால், தர்பூசணி விற்பனை குறைந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே, அவருக்கு எதிராக விவசாயிகள், வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதேபோல், சென்னை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள, 'பிலால்' ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட, 30க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.இதில் அண்ணா சாலை பிலால் ஹோட்டலில் ஆய்வுக்கு சென்றபோது, உடல்நிலையை காரணம் காட்டி திடீரென திரும்பினார். உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, அவர் ஆய்வு செய்யாமல் திருப்பியதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சதீஷ்குமார், பொது சுகாதாரத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இன்னும் எந்த பணி என்று அறிவிக்கப்படவில்லை.அதேநேரம், திருவள்ளூர் மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், சென்னை மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். தற்போது, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட அதிகாரியாக, அவர் பணியாற்றி வருகிறார்.தன் கடமையை செய்தற்காக, சதீஷ்குமார் தண்டிக்கப்பட்டதால், மற்ற துறை அதிகாரிகள் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.அதனால், ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. தவிர, கோடை கால தேவையை கருதி, சுகாதாரமற்ற குடிநீர், 10 ரூபாய் மதிப்பிலான செயற்கை குளிர்பானங்கள் என, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களின் விற்பனையும் அதிகரித்து உள்ளது.இதை தொடர்ந்து உட்கொள்ளும் பொதுமக்களுக்கு பல உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் தயக்கத்தை உடைத்து, உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க, அரசு முடுக்கிவிட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது சோதனை

சதீஷ்குமார் மீதான நடவடிக்கைக்குப் பின், எங்கள் அனைவருக்கும் ஒரு அச்சம் ஏற்பட்டது உண்மை தான். பிரபலமான ஹோட்டல்களில் சோதனை செய்யவோ, தர்பூசணி, மாம்பழம் உள்ளிட்டவற்றின் தரத்தை உறுதி செய்யவோ தயக்கமாக உள்ளது. அதேநேரம், புகாரின் அடிப்படையில் மட்டும், அவ்வப்போது சோதனை செய்து வருகிறோம்.- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்,சென்னை மாவட்டம்

சரிபார்த்து வாங்குங்க!

இயற்கையான மாம்பழங்களைவிட, ரசாயன மாம்பழங்களில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில், ரசாயனம் கலந்த பழம் இருக்கும். மேலும் ரசாயனம் அல்லது வித்தியாசமான வாசனை வரும். மென்மையாகவும், மிருதுவாகவும் இருந்தால், அவை ரசாயனம் கலந்ததாக சந்தேகிக்க வேண்டும். மாம்பழம் வாங்கும்போது விழிப்புடன் இருங்கள் என்கின்றனர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்..- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஏப் 25, 2025 09:43

ஆய்வாளர் சதிஷ் குமார் நேர்மையாகவே செயல்பட்டார். சிலர் தர்பூசணி பழத்தில் செயற்கை நிறமியை செலுத்தி விற்பனை செய்தது உண்மைதான். அதைத்தான் அவர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். உடனே அதை காரணமாக வைத்து அவரால் பாதிக்கப்பட்ட சமூக விரோத கும்பல் திருட்டு திராவிடத்தின் உதவியுடன் அவரை பழி வாங்குகிறார்கள். இதனால் மற்ற உணவு பாதுகாப்பு அலுவலர்களும் தங்கள் கடமையை செய்ய தவறுகிறார்கள். பாதிப்பு யாருக்கு? மக்களுக்குத்தான். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு ஏராளமானோர் கொடிய புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். தங்களுக்கு எதனால் புற்றுநோய் வந்தது என்று கூட அவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால், உண்மையான காரணம் உணவில் கலப்படம் செய்யும் சமூக விரோத கும்பல்கள்தான் என்ற உண்மை மக்களுக்கு புரிவதில்லை. நல்லவனுக்கு காலமில்லை.


अप्पावी
ஏப் 25, 2025 08:34

ஒருத்தன், ரெண்டு பேர் தில்லுமுல்லு பண்ணினா ஆய்வு செஞ்சு கண்டுபிடிச்சு அபராதம் போடலாம். இங்கே ஒட்டு மொத்த இந்தியாவுமே தில்லு முல்லு கும்பலாயிட்டு வருது. ரசாயன முறையில் பழுக்க வெக்கிறவனை புடிச்சு தூக்கில் போடாமல் ஜாமீன்ல உட்டு அழகு பாக்குறவனை வெச்சிக்கிட்டு நாடு வெளங்குமா?


Jayaraman Pichumani
ஏப் 25, 2025 05:35

ஆய்வு நடத்தினால் திமுக அரசு உடனே என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தெரிந்துதான் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மௌனமாக உள்ளனர். பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை