மேலும் செய்திகள்
பொறுமையா Batting பண்ணுவோம் நினைத்த England
11-Jul-2025
அம்பத்துார்,வடசென்னையில், குப்பை சேகரிக்கும் பணியை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியை கண்டித்து, துாய்மை பணியாளர்கள் கடந்த ஒருவாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அம்பத்துாரில் பணிக்கு திரும்பிய பெண் துாய்மை பணியாளரை, சக ஊழியர்கள் சரமாரியாக தாக்கியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வியாசர்பாடி, ஆடுதொட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி, 42. அம்பத்துார் மண்டலம், 86வது வார்டில், குப்பை அகற்றும் பேட்டரி வாகனம் ஓட்டி வருகிறார். ரிப்பன் மாளிகையில், துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து, அம்பத்துார் மண்டலத்தில் துாய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில், ஆதிலட்சுமி நேற்று பணிக்கு திரும்பியுள்ளார். இதையறிந்து அங்கு சென்ற சக துாய்மை பணியாளர்கள், 10க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம் ஆதிலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களான அம்மு, மலர், தேவிகா, பிரியா, பானு உட்பட சிலர், ஆதிலட்சுமியை தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த அவர், அம்பத்துார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
11-Jul-2025