உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி

மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி

திருவொற்றியூர்:திருவொற்றியூர், பலகை தொட்டி குப்பத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 50. அவரது மனைவி சங்கீதா. இவர்களது மகன் குமரன், 17.கடந்த 18ம் தேதி அதிகாலை, பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற சுப்பிரமணி, கரை திரும்பியபோது, திடீரென படகு கவிழ்ந்து, மயங்கி விழுந்தார்.அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.இந்நிலையில், சுப்பிரமணியின் குடும்பத்திற்கு, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ