மேலும் செய்திகள்
நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
17-Jul-2025
கொடுங்கையூர், கொடுங்கையூரில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வெடித்து சிதறிய 'காஸ்' சிலிண்டர்களால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனி, 2வது தெருவில் அட்டை கிடங்கு, பெயின்ட் மற்றும் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று இரவு 9:30 மணியளவில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரசாயனங்கள் இருந்ததால், சில நிமிடங்களில் தீ கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. அத்துடன் உள்ளே இருந்த இரண்டு காஸ் சிலிண்டர்களும் வெடித்துச் சிதறியதால், அக்கம் பக்கத்தினர் அச்சமடைந்தனர். தகவல் அறிந்து செம்பியம், கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட ஏழு தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுவட்டாரத்தில் 3 கி.மீ.,க்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் விபத்து நடந்ததால், அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Jul-2025