உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

கொருக்குப்பேட்டை,கொருக்குப்பேட்டை, வேலப்பன் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர், அதே பகுதியில் பழைய பிளாஸ்டிக் கிடங்கு நடத்தி வந்தார்.அவற்றை தரம் பிரித்து, கம்பெனிகளுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்; ஐந்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று மாலை திடீரென கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஏழுகிணறு உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்து, அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை