உள்ளூர் செய்திகள்

தீ விபத்து

பெரம்பூர், பெரம்பூர், ராமச்சந்திரன் தெருவில் உள்ள வீட்டில் வசிப்பவர் கஜேந்திரபாபு, 85. இவரது வீட்டின் கீழ் தளத்தில், அக்குபஞ்சர் கிளினிக்கும், மேல் தளத்தில் இரு குடும்பத்தினர் வாடகைக்கும் தங்கி உள்ளனர்.வீட்டில், நேற்று மின் மோட்டார் ஓடிக் கொண்டிருக்கும்போது, திடீரென தீப்பிடித்தது. இதனால் வீட்டில் தீ பரவியது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வியாசர்பாடி, செம்பியம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, 30 நிமிடத்தில் தீயை அணைத்தனர்.முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்