மேலும் செய்திகள்
சிங்கிள் காலம் மூதாட்டியிடம் செயின் பறிப்பு
16-Jun-2025
அண்ணா நகர் அண்ணா நகர், இரண்டாவது அவென்யூவில், 'யு.எஸ்., போலோ' என்ற பிராண்ட் துணிக்கடை ஷோரூம் செயல்படுகிறது. நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் கடையை திறந்தனர்.அப்போது, தரைத்தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சோதித்த போது, ஷூகள் வைத்திருந்த 'ரேக்' பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. உடனடியாக, தீயணைப்பானை கொண்டு, ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும், தகவலறிந்து வந்த அண்ணா நகர் தீயணைப்பு நிலை வீரர்கள், பின்பக்கம் வழியாக சென்று தீயை அணைத்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விசாரணையில், 'ஏசி'யில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Jun-2025