உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுகாதார அலுவலகத்தில் தீ விபத்து

சுகாதார அலுவலகத்தில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு ராஜவீதி பகுதியில், இரண்டாவது மாடி கட்டடத்தில் மாவட்ட சுகாதார அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் முதல் மாடியில், பராமரிப்பு பணிகள் நடப்பதால் இரண்டாவது தளத்தில் கூடுதலாக கணினிகள் வைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென கணினிகள் இருக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அலுவலகத்தில் இருந்த எட்டு கணினிகள், இரண்டு பிரின்டர், மூன்று 'ஏசி' மற்றும் முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாயின. திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !