உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுரவாயல் பர்னிச்சர் கடையில் தீ

மதுரவாயல் பர்னிச்சர் கடையில் தீ

மதுரவாயல், மதுரவாயல் அடுத்த செட்டியார் அகரம் பிரதான சாலையில் ராஜ் ப்ரீத், 37, என்பவர், பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். சோபா, கட்டில் உள்ளிட்ட பர்னிச்சர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலையில் இந்த கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. மதுரவாயல், அம்பத்துார், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள், இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் எரிந்து நாசமாயின. விபத்து குறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை