உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தீ விபத்து

பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தீ விபத்து

அண்ணா நகர், கிழக்கு அண்ணா நகர், மூன்றாவது அவென்யூவில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுகிறது.இரண்டு தளம் உடைய இந்த அலுவலக கட்டடத்தில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு கரும்புகை வெளியேறியது.பணியில் இருந்த காவலாளி வெங்கடேசன், அலுவலகத்திற்குள் நுழைந்து சோதித்தபோது, தரை தள அலுவலக அறையில் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது.அதிர்ச்சியடைந்த அவர், தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் மற்றும் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.மின் கசிவால் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், அலுவலக அறையில் இருந்த மின்சாதன பொருட்கள் மட்டும் எரிந்து சேதமடைந்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை