உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல் டிவிஷன் கால்பந்து லீக் தாவூத் நினைவு அணி அபாரம்

முதல் டிவிஷன் கால்பந்து லீக் தாவூத் நினைவு அணி அபாரம்

சென்னை சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான முதல் டிவிஷன் கால்பந்து போட்டி சென்னை, கண்ணப்பர் திடல் மைதானத்தில் நடந்து வருகிறது.நேற்று நடந்த போட்டியில் சாய் அணி, தாவூத் நினைவு அணியை எதிர் கொண்டது. ஆட்டம் முழுதும் சிறப்பாக விளையாடிய தாவூத் நினைவு அணிக்கு ஆறு கோல்கள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட சாய் அணி கடைசி வரை போராடியும், ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி 6-0 என்ற கோல் கணக்கில் தாவூத் நினைவு அணிக்கு சாதகமாக முடிந்தது.தாவூத் நினைவு அணி சார்பில், அஸ்டின் 10வது, 45வது, 68வது நிமிடங்களில் அணிக்காக மூன்று கோல்கள் அடித்தார்.தொடர்ந்து அஜய் 52வது, மாதேஷ் 75வது, கோகுல் 79வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ