உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசிமேடில் மீன் பிரியர்கள் ஏமாற்றம்

காசிமேடில் மீன் பிரியர்கள் ஏமாற்றம்

காசிமேடு: புயலின் தாக்கம் காரணமாக, டிச., 21ம் தேதி வரை விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்து அறிவிப்பு வெளியிட்டனர். இதனால், பெரும்பாலான படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.ஏற்கனவே சென்ற 40 படகுகள் மட்டுமே கரை திரும்பின. அவற்றிலும், கானாங்கத்த, பாறை, கருப்பு வவ்வால், வெள்ளை வவ்வால் உள்ளிட்ட மீன்களின் வரத்து இருந்தது. ஆனால் வெகு குறைவாகவே இருந்தது. இதனால், மீன் விலை கடந்த வாரத்தை விட இருமடங்கு உயர்ந்தது. ஏராளமான மக்கள் மீன்கள் வாங்காமலே, ஏமாற்றத்துடன் திரும்பினர்.மீன் விலை நிலவரம்மீன் வகை கிலோ(ரூ.)வஞ்சிரம் 1,000 - 1,300கறுப்பு வவ்வால் 900 - 1,000வெள்ளை வவ்வால் 1,200 - 1,300பாறை 400சங்கரா 350 - 400சீலா 500 - 600நெத்திலி 300 - 350கடம்பா 300 - 400வாளை 150 - 200கிளிச்ச 100 - 150கானாங்கத்த 200 - 300நண்டு 200 - 300இறால் 400 - 500


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ