மேலும் செய்திகள்
'ஹெராயின்' விற்பனை 4 பேர் கைது
17-May-2025
சென்னை :பெரியமேடு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், நேற்று காலை மை லேடி பூங்கா அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, ஐந்து பேரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, அவர்களை போலீசார் சோதனை செய்தனர்.அப்போது, அவர்கள், 1.5 கிலோ மெத்தகுலோன் என்ற போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.பின், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், சென்னை அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 44, மீஞ்சூரைச் சேர்ந்த குமார், 36, பெரியதுரை, 28, ராஜேஷ், 32, நரேஷ், 41, என்பது தெரியவந்தது.தொடர்ந்து, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
17-May-2025