உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பொருள் கடத்திய பெண் உட்பட ஐவர் கைது

போதை பொருள் கடத்திய பெண் உட்பட ஐவர் கைது

சென்னை:சென்னையில் போதை பொருள் கடத்திய, பெண் உட்பட ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை எஸ்பிளனேடு போலீசார் நேற்று முன்தினம் இரவு, மண்ணடி, ஜோன்ஸ் தெருவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்தவர்களை மடக்கி விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தில், அவரது உடமைகளை போலீசார் சோதனை செய்தபோது, 'மெத்ஆம்பெட்டமைன்' எனும் போதை பொருள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, கொடுங்கையூரைச் சேர்ந்த தினேஷ் பிரதாப், 23, தண்டையார்பேட்டையை சேர்ந்த சந்தோஷ், 18, புழலை சேர்ந்த பிரவீன், 20, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தேஜஷ், 18, மணலியை சேர்ந்த பாத்திமா மவுபியா, 25, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 50,000 ரூபாய் மதிப்பிலான, 7 கிராம் எடையிலான, 'மெத் ஆம்பெட்டமைன், இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பின், நேற்று, ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வாய்மையே வெல்லும்
நவ 08, 2024 17:50

சாம்பிராணி இல்லாட்டி புகையே வராதே.. இப்போ பெண்களும் சாம்பிராணி புகைக்கு காரணம் அமைதிக்கு வந்த சோதனை என்னவோ ?


Mani . V
நவ 08, 2024 06:00

என்ன கோப்பால் போதை பொருட்களையெல்லாம் ஒழித்து விட்டோம் என்று சொன்னது பொய்யா? நோ, நோ, அது ஒளித்து.