உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நகை திருடிய ஐந்து பெண்கள் சிக்கினர்

நகை திருடிய ஐந்து பெண்கள் சிக்கினர்

கண்ணகி நகர், ஓ.எம்.ஆர்., - பி.டி.சி., சந்திப்பு, பல்லவன் குடியிருப்பை சேர்ந்தவர் டில்லிபாபு, 33; ஐ.டி., ஊழியர்.கடந்த 9ம் தேதி, இவர் பணி முடித்து வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 19 சவரன் நகை திருடு போயிருந்தது.கண்ணகி நகர் போலீசார் விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்த சுமதி, 23, கலைவாணி, 19, உள்ளிட்ட 5 பெண்கள், வீடு புகுந்து நகையை திருடியது தெரிந்தது.நேற்று, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 19 சவரன் நகையை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை