உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாமூல் கேட்ட முன்னாள் கவுன்சிலர் கைது

மாமூல் கேட்ட முன்னாள் கவுன்சிலர் கைது

திருவொற்றியூர், திருவொற்றியூர், தாங்கல், சதானந்தபுரத்தைச் சேர்ந்தவர் இதயவாணன், 57; தண்ணீர் கேன் போடும் தொழில் செய்கிறார். இவரிடம் முன்னாள் திருவொற்றியூர் நகராட்சி கவுன்சிலர் நாகராஜ், 50, மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக இதயவாணன் நேற்று, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், நாகராஜை கைது செய்து விசாரிக்கின்றனர். கைதான நாகராஜ் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ