உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளைஞர் கொலை  வழக்கு நான்கு பேர் கைது

இளைஞர் கொலை  வழக்கு நான்கு பேர் கைது

திருநின்றவூர், திருநின்றவூரை சேர்ந்தவர் ரியாஸ், 21. இவர் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட நான்கு வழக்குகள் உள்ளன. கடந்த 24ம் தேதி, ரியாஸ் வீட்டின் பின்புறம் இறந்து கிடந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த ராபர்ட், அவரது தாய் மாமன் ஜேம்ஸ் மற்றும் நண்பர்கள், பால்வாடி தெருவில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, ரியாஸ், அவரது தம்பி பயாஸ் மற்றும் ஷியாம் ஆகியோர் அங்கு வந்தனர். ராபர்ட்டின் முதல் மனைவி மற்றும் ஷியாம் இடையே உள்ள கள்ளக்காதல் குறித்து பேசி தகராறில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ராபர்ட், ஜேம்ஸ் மற்றும் நண்பர்கள், ரியாசை அவரது வீட்டின் அருகே, கல் மற்றும் கட்டையால் அடித்து கொலை செய்தனர். மறுநாள், திருநின்றவூர் போலீசில் ராபர்ட், ஜேம்ஸ் சரண் அடைந்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த நடுகுத்தகையைச் சேர்ந்த அருண், 23, விஷ்ணு, 29, வெங்கடேஷ், 35, மற்றும் வினோத், 33, ஆகியோரை, போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி