உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பொருள் விற்ற நான்கு பேர் கைது

போதை பொருள் விற்ற நான்கு பேர் கைது

சென்னை, மதுரவாயல் ஆய்வாளர் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் வானகரம், கோல்டன் டிரசர் அடுக்குமாடி குடியிருப்பு அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை விசாரித்து, அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அவர்களிடம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில், புழல் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார், 23, மணிகண்டன், 36 என்பது தெரியவந்தது. அவர்களுடன் வானகரத்தைச் சேர்ந்த பாசில் உல்லா, 36 என்பவரும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. நேற்று மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 5.07 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மணி கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருவதும், பாசில் உல்லா தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்கும் தனியார் நிறுவனம் நடத்தி வந்தனர். பெரம்பூரில் குறிப்பிட்ட முகவரியில் போதைப் பொருள் பதுக்கி விற்கப்படுவதாக, திரு.வி.க.நகர் காவல்நிலைய தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பெரம்பூர், திரு.வி.க., நகர் பகுதியில் உள்ள வீட்டில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள 4 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் இருந்தது. போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்த தேவ் ஆனந்த், 32 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், பெங்களூரு சென்று அங்குள்ள நைஜீரியா நபரிடம் தொடர்பு கொண்டு போதைப் பொருளை வாங்கி வந்து நண்பர்கள் உள்ளிட்டோருக்கு விற்றது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை