இருதரப்பு மோதல் நால்வர் சிக்கினர்
கொடுங்கையூர்:கொடுங்கையூர், திருவள்ளுவர் சாலை சந்திப்பில், இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில், இரு தரப்பினரும் தப்பிச் சென்றனர்.பின் அவர்கள் குறித்து விசாரித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில், இரு தரப்பினர் முன்விரோதம் காரணம் தகராறில் ஈடுபட்டது தெரிந்தது.இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட விஜய், 20, ரமேஷ், 24, ரூபன், 23, இளையராஜா, 20, ஆகிய நால்வரை கைது செய்தனர்.