மேலும் செய்திகள்
கிரைம் கார்னர்
28-Oct-2025
அரும்பாக்கம்: ஸ்கூட்டரில் சென்ற நபரை நோட்டமிட்டு, கத்தியை காட்டி மிரட்டி, 2 லட்சம் ரூபாய் பணத்தை பறித்து தப்ப முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மண்ணடி பகுதியை சேர்ந்தவர் அமீது, 37. இவர், அதே பகுதியில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை, அரும்பாக்கத்தில் தன் நண்பரிடம், 2 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி, அதே பகுதியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தன் கணக்கில் செலுத்த முயன்றார். இரண்டு வங்கி இயத்திரங்களில் பணத்தை போடமுடியாததால், அரும்பாக்கம், பசும்பொன் தெரு வழியாக ஸ்கூட்டரில் சென்றார். அப்போது, அவரை ஸ்கூட்டரில் பின் தொடர்ந்த இருவர், அமீதுவிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து தப்பினர். அவர் சத்தம் போடவே, அங்கிருந்த சிலர், தப்பியோடிய திருடர்களில் ஒருவனை மடக்கி பிடித்து, அரும்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் பணத்துடன் தப்பினார். விசாரணையில், பிடிபட்டவர் பெரம்பூரை சேர்ந்த கார்த்திக், 25, என்பது தெரிந்தது. அவர் அளித்த தகவலின்படி, வழிப்பறிக்கு மூளையாக செயல்பட்ட வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜீவா, 23, அவரது கூட்டாளிகளான தியானேஸ்வரன், 27, அஜித், 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இதேபோல் வங்கியில் பணம் செலுத்தும் பலரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
28-Oct-2025