உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டய கணக்காளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

பட்டய கணக்காளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை,தாட்கோ' சார்பில், ஆதிதிராடவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், 100 பேருக்கு, பட்டய கணக்காளர், நிறுவன செயலர், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களுக்கு, தங்குமிடம், உணவு வசதிகள் தாட்கோ வாயிலாக ஏற்பாடு செய்யப்படும்.தகுதியுள்ள மாணவர்கள் பயிற்சியில் சேர, www.tahdco.comஎன்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ