உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரயில்வே குரூப் - டி தேர்வுக்கு இலவச பயிற்சி

 ரயில்வே குரூப் - டி தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை: ரயில்வே தேர்வு வாரியத்தின் 'குரூப் - டி' தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி, நாளை துவக்கப்படும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: ரயில்வே தேர்வு வாரியத்தின், 'குரூப் - டி' தேர்வின் பல்வேறு பணிகளில் 22,195 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தேர்வு, வரும் மார்ச் 2ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை காலை 10:30 மணிக்கு துவங்க உள்ளன. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், https://forms.gle/sRVKQJ2QUFj6rxLn7 என்ற படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். தகவல்களுக்கு, கிண்டி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை