உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இலவச வாலிபால் பயிற்சி எழும்பூரில் 28ல் துவக்கம்

இலவச வாலிபால் பயிற்சி எழும்பூரில் 28ல் துவக்கம்

சென்னை, நெல்கலை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், 41வது ஆண்டிற்கான கோடைக்கால இலவச வாலிபால் பயிற்சி முகாம், இம்மாதம் 28ம் தேதி, காலை 6:30 மணிக்கு துவங்குகிறது.இம்முகாம், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் உள்ள வாலிபால் விளையாட்டு மைதானத்தில் நடக்க உள்ளது. முகாமில், 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே பங்கேற்க முடியும்.பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர், பயிற்சி துவங்கும் நாளில் நேரடியாக பங்கேற்று, பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.விபரங்களுக்கு, செயலர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளரின் 93822 07524 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ