குன்றத்துார் முருகன் கோவிலில் 2 ஜோடிக்கு இலவச திருமணம்
குன்றத்துார்; குன்றத்துார் முருகன் கோவிலில், இரண்டு ஜோடிகளுக்கு, நேற்று இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. குன்றத்துாரில், பிரசித்தி பெற்ற சுப் பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், இக்கோவிலில் இரண்டு ஜோடிகளுக்கு நேற்று இலவச திரும ணம் செய்து வைக்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தி, அரசு சார்பில் தலா 70,000 ரூபாய் மதிப்புடைய சீர்வரிசை பொருட்களை வழங் கினார். இதில், கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைகண்ணன், செயல் அலுவலர் ஸ்ரீகன்யா உள்ளி ட்ட பலர் பங்கேற்றனர்.