மேலும் செய்திகள்
புதிய வகை காகிதம்: டி.என்.பி.எல்., அறிமுகம்
27-Jul-2025
சென்னை, 'ஜி ஸ்கொயர்' நிறுவனம், புழல், மேடவாக்கம் ஆகிய இரண்டு இடங்களில், புதிய குடியிருப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், வடசென்னை, தென்சென்னையில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 'ஜி ஸ்கொயர் நார்த்தன் கிரவுன்' வீட்டு மனை திட்டம், வடசென்னை புழலில், அம்பத்துார் - செங்குன்றம் சாலையில் அமைந்துள்ளது. சதுர அடிக்கு, 7,999 ரூபாய் விலையில், 650 சதுர அடி முதல் வீட்டு மனைகள் உள்ளன. இங்கு, 75 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும் வீட்டு மனை மற்றும் வில்லா தொகுப்புகளை தேர்வு செய்யலாம். தென்சென்னை மேடவாக்கத்தில், 'ஜி ஸ்கொயர் சவுத் கிரவுன்' திட்டத்தில், சதுர அடிக்கு, 6,499 ரூபாய் விலையில், 1,057 சதுர அடி முதல் வீட்டு மனைகள் உள்ளன. வீட்டு மனை மற்றும் வில்லா திட்டங்கள், 1 கோடி ரூபாயில் இருந்து துவங்குகிறது. ஜி ஸ்கொயர் குழும நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பால ராம ஜெயம் கூறியதாவது: சென்னை வடக்கு, தெற்கில் வளர்ச்சி கண்டு வரும் முக்கிய நகரங்களில், முதல்முறையாக இதுபோன்ற பிரீமியம் மனைகளின் சலுகையை அறிமுகம் செய்கிறோம். இந்த இரு பிரீமியம் வீட்டு மனை திட்டங்களும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. தனித்துவமான திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
27-Jul-2025