வரசித்தி விநாயகர் கோவிலில் கந்தசஷ்டி காவடி மகோற்சவம்
நங்கநல்லுார், நங்கநல்லுார், இரண்டாவது பிரதான சாலையில் உள்ளது, வரசித்தி விநாயகர் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டு, வரசித்தி விநாயகர் சேவார்த்திகள் சங்கம் சார்பில், 52வது கந்த சஷ்டி காவடி விழா, கடந்த 2ம் தேதி முதல் நடந்து வருகிறது.விழாவின் பிரதான நாளான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, இன்று காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது.இதையடுத்து, காலை 7:00 மணிக்கு காவடி பூஜை, வேதபாராயணம்; 8:00 மணிக்கு மஹந்யாசம் ஏகாதச ருத்ராபிஷேகம். மாலை 6:00 மணிக்கு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை பிரசாதம் வினியோகம். இரவு 8:30 மணிக்கு முருக பெருமான் மயில் வாகனத்தில் வீதிஉலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.