மேலும் செய்திகள்
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
06-May-2025
செங்குன்றம் :செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், செங்குன்றம், மொண்டியம்மன் நகர் சோதனை சாவடி அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக தனித்தனி பைக்குகளில் வந்த இருவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், இருவரது பையையும் போலீசார் சோதனை செய்தனர்.அதில் கஞ்சா இருப்பது தெரிந்தது. இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஷ், 19, ராகுல் சுக்லா, 20, என தெரிந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
06-May-2025