உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை கொட்டி தேக்கம் நடைபயிற்சி செல்ல சிரமம்

குப்பை கொட்டி தேக்கம் நடைபயிற்சி செல்ல சிரமம்

பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், பழைய பல்லாவரம், சுபம் நகரில், நுாற்றுக்கணக்கான வீடுகள்உள்ளன.இப்பகுதியில் உள்ள பூங்காவில், முதியோர்கள் ஏராளமானோர் காலை, மாலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.பல்லாவரம், நகராட்சியாக இருந்தபோது, இப்பூங்கா சுற்றுச்சுவரை ஒட்டி உரம் தயாரிக்கும் சிறிய கிடங்கு கட்டினர். கட்டியதில் இருந்து, அந்த இடத்தில் உரம் தயாரிக்கப்படவில்லை.தற்போது, சுற்றுப்புற பகுதிகளில் இருந்து அகற்றப்படும் குப்பையை இங்கு கொட்டி தேக்குகின்றனர். இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லையும் பன்மடங்கு பெருகிவிட்டது.மற்றொரு புறம், இந்த துர்நாற்றத்தால், பூங்காவில் நடைபயிற்சி செல்ல முடியாமல் முதியோர்கள் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக, மண்டல அலுவலகத்தில் புகார் கொடுத்தும், யாரும் கண்டு கொள்ளவில்லை.பூங்காவை ஒட்டி குப்பை கொட்டுவதை நிறுத்த, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை