உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை

பெருங்களத்துார், மார்ச் 22-புது பெருங்களத்துார், சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர் முத்துசுப்ராம், 29. படப்பையில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டில் தனியாக இருந்த முத்துசுப்ராம், வேலை விஷயமாக, மார்ச், 17ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குஜராத் சென்றார். நேற்று காலை, பக்கத்துவீட்டில் வசிப்பவர்கள் பார்த்தபோது, முத்துசுப்ராம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.போலீசார் நடத்திய விசாரணையில், பீரோவில் இருந்த ஒன்றரை சவரன் நகை, 1.12 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி