உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிங்கிள் காலம் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

சிங்கிள் காலம் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

சென்னை, மார்ச் 27-தமிழ்நாடு கூட்டுறவு துறையின், சென்னை மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025 - 26 ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி துவக்கப்பட உள்ளது.பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், குறைந்தபட்ச வயது, 17 ஆக இருக்க வேண்டும். தமிழ் வழியில் நடத்தப்படும் இப்பயிற்சி, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என, 34 நாட்கள் நடக்கிறது.இதற்கான விண்ணப்பங்கள், பிராட்வேயில் உள்ள சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், ஏப்., 13ம் தேதிக்குள் பெற்று விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 044- 2536 0041, 9444 470013, 90427 17766 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை