உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பஸ் ஓட்டுநர் கார் மோதி பலி

அரசு பஸ் ஓட்டுநர் கார் மோதி பலி

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே உள்ள மருவூர் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் போர்ஷி, 52. இவர், குரோம்பேட்டை போக்குவரத்து பணிமனையில், மாநகர பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் இரவு, தனக்குச் சொந்தமான 'ஹோண்டா ஸ்பிளெண்டர் ப்ளஸ்' இருசக்கர வாகனத்தில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேல்மருவத்துார் நோக்கிச் சென்றார்.அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த 'ரெனால்ட் நிசான்' கார், அதிவேகமாக இவரது இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது. இதில் துாக்கி வீசப்பட்ட போர்ஷி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை