உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலாற்றில் பண்டைய கால பொருட்கள் அரசு பள்ளி மாணவர்கள் கண்டெடுப்பு

பாலாற்றில் பண்டைய கால பொருட்கள் அரசு பள்ளி மாணவர்கள் கண்டெடுப்பு

திருக்கழுக்குன்றம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ குழுவினர், பாலாற்றில் பண்டைய கால பொருட்களை கண்டெடுத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை அடுத்த பாண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தன்னார்வ அறக்கட்டளை நியமன வரலாற்று ஆசிரியராக பணியாற்றுபவர் வடிவேல். பண்டைய கால மனிதரின் வாழ்வியல் முறை, அக்கால கருவிகள் பாலாற்றுப் படுகையில் கண்டறியவது குறித்து, அப்பள்ளி மாணவ - மாணவியரிடம் விவரித்து, பயிற்சியும் அளித்து வருகிறார்.அவரிடம் பயிற்சி பெற்ற, 9ம் வகுப்பு மாணவர்கள் பிரித்விராஜ், பாவனேஷ், பிரவீன் மற்றும் 7ம் வகுப்பு மாணவி டெய்ஷிகா ஆகியோர், எடையாத்துார் பாலாற்றுப் படுகையில், கள ஆய்வு நடத்தினர்.அப்போது, புதிய கற்கால பட்டை தீட்டும் கற்சாதனங்கள், கவட்டிக்கல், சுடுமண் அகல் விளக்கு, மண்பானையின் கெண்டிமூக்கு ஆகியவற்றின் உடைந்த பாகங்கள், சுடுமண் பொம்மை கை பாகம் உள்ளிட்டவற்றை அவர்கள் கண்டெடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி