உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பள்ளி மாணவர்கள் ஹாக்கியில் அபாரம்

அரசு பள்ளி மாணவர்கள் ஹாக்கியில் அபாரம்

திருவொற்றியூர், பள்ளிக்கல்வித்துறை சார்பில், நேற்று முன்தினம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில், சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, அபாரமாக விளையாடினர்.இறுதிப் போட்டியில் அண்ணா சாலை, மதர்ஷா மேல்நிலைப் பள்ளி மற்றும் சின்னசேக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இப்போட்டியில் யாரும் கோல் அடிக்காததால், 'டைபிரேக்கர்' முறையில் 3 - 1 என்ற புள்ளிக் கணக்கில், சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது.இதன் மூலம், புதுக்கோட்டையில், பிப்., 5 முதல் 7ம் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு, சின்னசேக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி