உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பள்ளி வாலிபால் அணி மாவட்ட போட்டிக்கு தேர்வு

அரசு பள்ளி வாலிபால் அணி மாவட்ட போட்டிக்கு தேர்வு

திருவொற்றியூர், குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்றதன் வாயிலாக, ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் வாலிபால் அணி, 12 ஆண்டுகளுக்கு பின், மாவட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ளது. சென்னை பள்ளிக் கல்வித்துறை சார்பில், திருவொற்றியூர் குறுவட்ட அளவில், பள்ளிகள் இடையேயான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. அதன்படி, வாலிபால் போட்டி, ஆக., 13ம் தேதி, காலடிப்பேட்டை, செயின்ட் பால்ஸ் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், 13 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். அதன்படி, 19 வயதுக் குட்பட்ட வாலிபால் போட்டியின் இறுதி சுற்றில், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் அணி, 30 - 20 என்ற புள்ளி கணக்கில், காலடிப்பேட்டை செயின்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளி அணியை தோற்கடித்து முதலிடம் பிடித்தது. இதன் வாயிலாக, 2013ம் ஆண்டிற்கு பின், அதாவது 12 ஆண்டுக்குப்பின், மாவட்ட அளவிலான போட்டிக்கு, இப்பள்ளி தேர்வாகியுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வான யுவனேஷ் தலைமையிலான வாலிபால் அணிக்கும், கோ - கோ, எறிபந்து போட்டியில் இரண்டாமிடம் பிடித்த அணிகளையும், தலைமை ஆசிரியை வெற்றி செல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் கலில் உசேன், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை