பேத்திக்கு பாலியல் வன்கொடுமை தாத்தாவுக்கு 20 ஆண்டு சிறை
சென்னை, மயிலாப்பூர் அருகே, பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த, அவரது தாத்தாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மயிலாப்பூர் அருகே ஏழு வயது சிறுமி, 2024, அக்., 25ல், வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.அப்போது, அவரது தாத்தா, சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார்.இதையறிந்த சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, மயிலாப்பூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, 57 வயதான சிறுமியின் தாத்தாவை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு பிளீடர் எஸ்.அனிதா ஆஜராகி, ''சிறுமியை, அவரது சொந்த தாத்தாவே, பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார் என்பதால், அதிகபட்ச தண்டனையும், மன ரீதியான பாதிப்புக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்,'' என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியின் தாத்தா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 1.50 லட்சம் ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.