மேலும் செய்திகள்
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
05-Oct-2025
வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி
05-Oct-2025
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
05-Oct-2025
சென்னை,தமிழகத்தின் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பன்னீர், பச்சை திராட்சை அதிகளவில் விளைகின்றன. மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில், பச்சை, ஷரத், கல்பனா வகை கொட்டையில்லாத திராட்சைகள் அதிகளவில் விளைகின்றன.தற்போது, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் திராட்சை சீசன் துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, கோயம்பேடு சந்தைக்கு பலவகை திராட்சை பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன. தினமும் 15 முதல் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் திராட்சை பழங்கள் வரத்து உள்ளது. இரண்டு கிலோ அட்டை பெட்டி, 15 கிலோ டிரேவில் அடைத்து அவை விற்பனைக்கு வருகிறது. மொத்த விலையில் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 80 ரூபாய் வரையும், அவை விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் சாலையோர கடைகள் மட்டுமின்றி, வாகனங்களிலும் வைத்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கு திராட்சை பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.தற்போது விற்பனைக்கு வரும் திராட்சை பழங்களில் புளிப்பு தன்மை உள்ளது. பனிப்பொழிவு முடிந்து வெயில் காலம் துவங்கினால், இனிப்பு திராட்சைகள் அதிகளவில் கிடைக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025