உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துார் முருகன் கோவில் பக்தர்களுக்காக பசுமை பந்தல்

குன்றத்துார் முருகன் கோவில் பக்தர்களுக்காக பசுமை பந்தல்

குன்றத்துார்:குன்றத்துார் மலை மீது அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் என்ற சிறப்பை பெற்றது.செவ்வாய்கிழமை மற்றும் கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில், இக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.மலை கோவிலை பொறுத்தவரை, அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. இதில், படிக்கட்டு பாதையை தான் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.பக்தர்களின் நலனை கருத்தில் வைத்து, கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் படிக்கட்டு பாதையில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ