உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜி.எஸ்.டி., சமாதான் திட்டத்தில் மார்ச் 31 வரை பயன்பெறலாம்

ஜி.எஸ்.டி., சமாதான் திட்டத்தில் மார்ச் 31 வரை பயன்பெறலாம்

சென்னை, ''ஜி.எஸ்.டி., சமாதான் திட்டம், மார்ச் 31 வரை பயன்பாட்டில் இருக்கும். இந்த வாய்ப்பை சிறு, குறு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என, சென்னை புறநகர் கமிஷனர் நாசர்கான் தெரிவித்தார்.சென்னை புறநகர் ஆணையரகத்தின் ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் துறை சார்பில், ஜி.எஸ்.டி., செலுத்துவோருக்கான மக்கள் தொடர்பு நிகழ்ச்சி, கடந்த 14ம் தேதி கும்மிடிப்பூண்டியில் நடந்தது.நிகழ்ச்சியில், சென்னை புறநகர் கமிஷனர் நாசர்கான் பேசியதாவது:கடந்த, 2017 - 18, 2018 - 19, 2019 - 20 ஆகிய ஆண்டுகளுக்கான, ஜி.எஸ்.டி., சமாதான் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அந்த ஆண்டுகளில் விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் வட்டி இல்லாமல் ஜி.எஸ்.டி., செலுத்தலாம். நடப்பாண்டு மார்ச் 31வரை, இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். வரி செலுத்துவோரையும், ஜி.எஸ்.டி., துறையையும் இணைப்பது, வரி வழக்குகளை குறைத்து, செழிப்பான வணிகம் நடப்பதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்குவது திட்டத்தின் நோக்கம். இந்த வாய்ப்பை சிறு, குறு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை