உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜி.எஸ்.டி., சாலையில் போலீசார் சோதனை ஏர்போர்ட்டில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

ஜி.எஸ்.டி., சாலையில் போலீசார் சோதனை ஏர்போர்ட்டில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

சென்னை:வெளிநாடுகளுக்கு செல்வோரையும், அங்கிருந்து வருவோரையும் அழைத்து செல்ல வசதியாக, சென்னை விமான நிலையத்திற்கு தினம் நுாற்றுக்கணக்கான வாடகை கார்கள், சொந்த வாகனங்கள் இயக்கப்படுகின்றன.இப்படி வரும் வாகனங்கள், தாம்பரத்திற்கு செல்வதற்கு, விமான நிலையத்தில் இருந்து வெளியேறி 'யு - டர்ன்' செய்து ஜி.எஸ்.டி., சாலை வழியாக செல்வது வழக்கம்.முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என, பலர் வந்து சென்றாலும், போக்குவரத்து நெரிசல் குறைந்த அளவே காணப்படும்.இந்நிலையில், சில நாட்களாக, விமான நிலையம் வெளியே, வாகன சோதனைக்காக இரு புறமும் பேரிகார்டு அமைத்து, அவ்வழியே வரும் வாகன ஓட்டிகளை, மீனம்பாக்கம் போக்குவரத்து போலீசார் நிறுத்துகின்றனர்.ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சோதிப்பதாக கூறி, பணம் வசூலில் ஈடுபடுகின்றனர்.இதனால், இரவு 10:00 மணி முதல், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் ஜி.எஸ்.டி., சாலை வரை, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்குவதாக, பயணியர் புகார் தெரிவிக்கின்றனர்.பயணியர் கூறியதாவது:உறவினர்களை பார்க்க செல்வதற்காக, மும்பை சென்று, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, சென்னை திரும்பினோம்.விமான நிலையத்தில் இருந்து, தனியார் செயலியில் வீட்டிற்கு செல்ல 'புக்கிங்' செய்து புறப்பட்டோம். ஆனால், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தை தாண்டி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நின்றன.விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கலாம் என நினைத்தோம். சிறிது நேரம் கழித்து பார்த்ததால் அப்படி எதுவும் இல்லை.மாறாக போலீசார், ஜி.எஸ்.டி., சாலையில் நின்று வாகன சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே, விமானத்தில் பயணம் செய்து வெளியே வருகிறோம்.காரணமின்றி, இதுபோல வாகனங்களை நிறுத்தி, சோதிப்பதாக கூறி நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது, அதிருப்தியை ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், இதற்கு தகுந்த நடவடி்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை