உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி ரயில் நிலைய மேம்பாட்டு பணி மே மாதத்தில் முடியும்

கிண்டி ரயில் நிலைய மேம்பாட்டு பணி மே மாதத்தில் முடியும்

சென்னை,'கிண்டி ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் வரும் மே மாதத்தில் முடியும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் கிண்டி ரயில் நிலையம் முக்கியமானதாக உள்ளது. ஐ.டி., நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இருப்பதால், பயணியர் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இங்கு தினமும் 65,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும், 98 விரைவு ரயில்களும் கடந்து செல்கின்றன. அருகில் மெட்ரோ, பஸ் நிலையம் வசதி இருப்பதால், பயணியர் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதை கருத்தில் கொண்டு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், கிண்டி ரயில் நிலையத்தில் 13.50 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பன்னடுக்கு வாகன நிறுத்தம், புதிய நடைபாதைகள், நடைமேம்பாலங்கள், எஸ்கலேட்டர்கள், லிப்ட்கள், 'சிசிடிவி' கேமராக்கள், டிஜிட்டல் தகவல் பலகைகள், உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு மையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை இடம் பெறும். அனைத்து பணிகளும் வரும் மே மாதத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ