கின்னஸ் கலைஞர் நுால் வெளியீடு
சென்னை:மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் எழுதிய, 'கின்னஸ் கலைஞர்' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னை புத்தக கண்காட்சி அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நுாலை வெளியிட, தமிழ் பிரதியை தமிழக முன்னாள் காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பெற்றுக்கொண்டார். ஆங்கில பிரதியை உலக செஸ் சாம்பியன் குகேஷ் பெற்றார்.அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், ''கலைஞர் பெயரில் நடத்திய மாரத்தான், கின்னஸ் சாதனை படைத்தது. மாரத்தான்களில் கிடைத்த தொகை, மருத்துவ துறைக்கு வழங்கப்பட்டது. கலைஞரின் சாதனைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன,'' என்றார்.நிகழ்ச்சியில், திருவண்ணாமலை ஆதீனம் குருமஹா சன்னிதானம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.