உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கனரக வாகனங்களுக்கு தடை அறிவிப்பு பலகை அமைப்பு தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்

கனரக வாகனங்களுக்கு தடை அறிவிப்பு பலகை அமைப்பு தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்

சென்னை, பல்லாவரம் மேம்பாலம், மீனம்பாக்கம் விமான நிலைய மேம்பாலத்தில், பீக் ஹவர்' வேளைகளில் தடையை மீறி லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரிசைக்கட்டி செல்வது அதிகரிக்க துவங்கியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பள்ளி மாணவ - மாணவியர், பயணியர், வேலைகளுக்கு செல்வோர் கடும் அவதியடைந்து வந்தனர்.இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, விமான நிலைய மேம்பாலம், பழைய விமான நிலையம் பகுதிகளில், கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு நேர பலகை அமைத்து மீனம்பாக்கம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதனால், கனரக வாகனங்கள், லாரிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே உள்ளே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், பல்லாவரம் மேம்பாலத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது, லாரி உரிமையாளர்களுக்கு போலீசார் உடந்தையாக இருக்கின்றனரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை