ஹிந்து குடும்ப சங்கமம் விழா
சென்னை:விவேக பாரதி மற்றும் ராஷ்டிர சேவிகா சமிதி இணைந்து நடத்தும், 10வது 'ஹிந்து குடும்ப சங்கமம்' விழா, சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. 'விவேக பாரதி' நிறுவனர் ஆர்.பி.வி.எஸ்.மணியன், விழாவை துவக்கினார்.விழாவில் 300க்கும் மேற்பட்டோர், குழு விளையாட்டு, கலந்துரையாடல் மற்றும் கோலம், திருக்குறள் ஒப்புவித்தல், உறியடி, வினாடி - வினா ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., தென் மாநில மக்கள் தொடர்பாளர் பிரகாஷ் கூறியதாவது:வரும் 2026 விஜயதசமி வரை, ஹிந்து தர்ம விஷயங்களை, வீட்டிலேயே பயிற்சி செய்ய வேண்டும். அனைவரும் ஹிந்து மக்கள் என்ற புள்ளியில் ஒன்று சேர வேண்டும். குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மேலும், ஹிந்து குடும்பம் மேம்பாட்டு திட்டம், ஹிந்து ஒற்றுமை, சுற்றுச்சூழல், தன்னை அறிதல், பாரத குடிமக்கள் ஒற்றுமை என்ற ஐந்து முக்கிய படிநிலைகளை கடைபிடிக்க வேண்டும்.அகண்ட பாரதம் அமைக்க, அனைவரும் ஒன்றிணைவோம். ஒற்றுமை நாட்டை உருவாக்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, விஷ்வ ஹிந்து பரிஷத் மூத்த கார்யகர்த்தா கனகராஜ், ராஷ்டிர சேவிகா சமிதி மாநில செயலர் கோமதி நவீன் பங்கேற்றனர்.