ஹிந்து முன்னணியினர் மோட்ச தீப ஊர்வலம்
மணலி, மணலி பேருந்து நிலையம் அருகே, நேற்று மாலை ஹிந்து முன்னணி சார்பில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த, 27 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, புஷ்பாஞ்சலி மற்றும் மோட்ச தீப ஊர்வலம் நடந்தது.மாநில செயலர் மனோகர், மாவட்ட செயலர் சங்கர் தலைமையில் 60க்கும் மேற்பட்டோர், மணலி பேருந்து நிலையத்தில் இருந்து, பாரதியார் நகர் - தில்லை புரத்து மாரியம்மன் கோவில் வரை, மோட்ச தீபம் ஏற்றி ஊர்வலமாக சென்று, கோவிலில் தீபம் வைத்தனர்.அதே போல், திருவொற்றியூர், தேரடி சன்னதி தெருவில், பா.ஜ., திருவொற்றியூர் கிழக்கு மண்டல் தலைவர் புருஷோத்தமன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர், பயங்கரவாத தாக்குதலில் பலியானோருக்காக மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.அப்போது, பாகிஸ்தான் கொடி தீயிட்டு கொளுத்தப்பட்டது.